PSG மருத்துவ மனையின் நிர்வாகத்திற்கும், மருத்துவ மனையின் ஊழியர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளும், பாராட்டுகளும். எனது தந்தை கடந்த ஒரு மாத காலமாக தொடர் காய்ச்சல் காரணமாக எங்கள் ஊரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இருந்தாலும் உடல் நிலையில் பெரிய மாற்றமில்லை, சில நாட்கள் எங்கள் வீட்டில் ஓய்வில் இருந்த சமயத்தில் மீண்டும் காய்ச்சல், உடல் நடுக்கம், தளர்வின் காரணமாக சென்ற வாரம் 16.04.2024 நமது மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க சேர்த்த பிறகு, அங்கிருந்த மருத்துவர்கள், செவிலிய நண்பர்கள் மிக விரைவாக செயல்பட்டு ஆரம்ப நிலை சிகிச்சையை நன்கு செயல்படுத்தினர். அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். என்னுடைய பரிந்துரையின் பேரில் நுரையீரல் நல மருத்துவர். செந்தில் தலைமையின் கீழ் உள்நோயாளி பிரிவில் சேர்க்க விரும்பியதால் அவரை உடனடியாக அழைத்தனர். மருத்துவர். செந்தில், சுதாசாகர் உடனடியாக வந்து தேவையான பரிசோதனை மற்றும் ஆரம்ப நிலை ஆன்டபாயாடிக் மருந்து சிகிச்சையை பரிந்துரைத்தனர். பின்பு சிறப்பு பிரிவுஅறை 1202 ல் இருந்து சிகிச்சை பெற அனுமதிக்க பட்டோம், பரிசோதனைகளின் முடிவுகள் ஆரம்பத்தில் சிறுநீரக பாதை தொற்று, இரத்தத்தில் தொற்று இருப்பதை உறுதி படுத்தியதால், அதற்கான ஆன்டிபயாடிக் சிகிச்சை மாற்றப்பட்டது, மருத்துவர் செந்தில் மற்றும் ஸைராமா ஆலோசனையின் பேரில் இருதய ஸ்கேன் எடுத்த பிறகு இருதய மருத்துவர் பிரேம் கிருஷ்ணா ஆலோசனை பெறப்பட்டது. இருதய வால்வு பகுதியில் கிருமி தொற்று இருப்பதால் ஆன்டிபயாடிக் சிகிச்சை நான்கு வாரங்களுக்கு பரிந்துரைத்தார். ஒரு வார தொடர் சிகிச்சைக்கு பிறகு நேற்று (22.04.2024) டிஸ்சார்ஜ் செய்யபட்டார் நலத்துடன். மருத்துவர்கள் அனைவரின் கனிவான முறையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் எங்களுக்கு மேலும் நம்பிக்கை தந்தது. அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் பல, மருத்துவம் சார்ந்த குழுவின் சிறப்பான தொடர் கண்காணிப்பு மேலும் நம்பிக்கை தந்தது. (Mrs.Ruby anitha CNS, Dr. Janapreethi, clinical pharmacist, Mr. Haish and Ms. Manimegalai physician associate) அவர்களுக்கும் பணிவான நன்றிகள். உதவிசெவிலிய கண்காணிப்பாளர் திருமதி. ஜெயமோனி அவர்களின் வழிகாட்டுதலில் (Spl B block) செவிலிய மேற்பார்வையாளர், அனைத்து நேர செவிலியர்களும் நேரந்தவறாமல் கவனமான சிகிச்சை மற்றும் கனிவான முறையில் குடும்ப உறுப்பினர்கள் போல சிறப்பாக கவனித்ததில் அப்பா நலத்தில் நன்றாகவே முன்னேறினார். அவர்களுக்கும், மனப்பூர்வமான நன்றிகள் பல💐. சிறப்பு வார்டு பிரிவு மேலாளர் திரு. நாகராஜ், மற்றும் அவர்களின் குழுவினருக்கும் நன்றிகள் பல. அந்த வார்டின் (Billing) கிளார்க் அவ்வப்போது claim சார்ந்த விஷயங்களை சிறப்பாக கையாண்டு எனக்கான சிரமத்தை வெகுவாக குறைத்தார். அவருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். Claim சார்ந்த விஷயங்களில் எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துகொண்ட மருத்துவ மனையின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நன்றிகள். மருந்தக துறை மற்றும் அல்ட்ரா சவன்ட் துறை சார்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சிறப்பான மற்றும் சரியான சிகிச்சை வழங்கும்