news-and-events

News

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் ஜி.வி நினைவு சொற்பொழிவு

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் ஜி.வி நினைவு சொற்பொழிவு

கோயம்புத்தூரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான பி.எஸ்.ஜி மருத்துவமனையை தொடங்கிய வரும், பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக 13 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவருமான ஜி.வரதராஜ் பிறந்த தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஜி.வி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. ரோட்டரி சங்கம் உள்ளிட்ட கோவையை சேர்ந்த பல அமைப்புகளில் ஜி.வரதராஜ் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் பிறந்த நாளை ( நவம்பர் 1) முன்னிட்டு ஆண்டுதோறும் கல்லூரி நிர்வாகம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அந்த வகையில், “மனிதனும் தெய்வமாகலாம்” எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி பி.எஸ்.ஜி‌ மருத்துவக் கல்லூரியின்‌ கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகைச்சுவை நாவலர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வெற்றிக்கு மகுடம் சூட்டியவர் ஜி.வரதராஜ். தனது தொலைநோக்கு பார்வையுடன் தர்ம சிந்தனையுடன் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியை‌ நிறுவினார் என்றவர்., தனக்காக வாழ்பவன் மனிதன்: பிறருக்காக வாழ்பவன் தெய்வம். அதேபோல் பிறருக்காக வாழ்ந்தவர் தான் ஜி.வரதராஜ் நம்பிக்கையை விதையாக்கியவர் என்று‌ பேசினார். தொடர்ந்து பேசிய அவர், பன்முக பார்வை‌க் கொண்ட ஜி.வி‌ அவர்களின் வாழ்க்கையை மாணவர்கள் பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரித்தினார். இந்த நிகழ்வுக்கு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுப்பாராவ், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Copyrights © 2025 PSG Hospitals. All Rights Reserved.