இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023″எனும் தலைப்பில் இந்தியாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய நவீன நுட்பமான வசதிகள்,விளைவுகளை பாதிக்கும் காரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் இருதயம்,நுரையீரல் சார்ந்த நெஞ்சக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.இதில் இந்தியாவில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கான நவீன முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் இருதய மேற்படிப்பு படிப்பவர்களுக்கு நேரலையில் விலங்குகளுக்கு இதயம் பொருத்தப்பட்டு, நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
பிஎஸ்ஜி மருத்துவமனையில் நடந்த இந்த “தோஹார்ட் 2023″கருத்தரங்கின் மூலமாக மருத்துவ உலகில் வளர்ந்து வரும் தற்போதைய இருதய அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு,அனுபவம் வாய்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு விலங்குகளின் இருதயம் மூலம் நேரடி பயிற்சிகள் கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பளிக்கபட்டது.
மேலும் இந்த கருத்தரங்கில் பங்கேற்ற இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிஎஸ்ஜி மருத்துவமனையால் கௌரவிக்கப்பட்டன.இந்த கருத்தரங்கில், முதல்வர் மருத்துவர் சுப்பா ராவ், மருத்துவர் பாலகிருஷ்ணன்,பிஎஸ்ஜி மருத்துவமனையின் இயக்குனர்,மருத்துவர் ஜே.எஸ்.புவனேஸ்வரன்,மருத்துவர்கள் மனோஜ் துரைராஜ், பி ஆர் முருகேசன், முருகன், மருத்பிரதீப், சி.ஆனந்தநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.