news-and-events

News

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வலிப்பு நோய் தினம் அனுசரிப்பு

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வலிப்பு நோய் தினம் அனுசரிப்பு

உலக வலிப்பு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது. பி.எஸ்.ஜி மருத்துவமனையின் சார்பில் வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வலிப்பு ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடம் கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வில் மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன், நரம்பியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பார்மசி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.    
  • Click here for Media reference
  • Copyrights © 2024 PSG Hospitals. All Rights Reserved.