Medical Tourism

வலிப்பு நோய் என்றாலே, தீராத நோயாக, பெரிய குறையாக கருதப்பட்ட காலங்கள் கடந்து விட்டன .நவீன மருத்துவத்தில்,குணப்படுத்த முடியாத நோய் என,எதுவும் இல்லை என்ற நிலை எற்பட்டுள்ளது.வலிப்பு நோயும் அதற்கு விதிவிலகல்ல.
“வலிப்பு நோய்க்கு, அதிநவீன கிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அச்சமின்று வாழ, நிபுணர்களின் ஆலோசனை , சிகிச்சை போதும் ,” என்கிறார், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனை நரம்பியல் துறை,வலிப்பு நோய்க்கான நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கர் ஐயர்.
அவர் கூறியதாவது:
நரம்பியல் துறையில் வலிப்பு நோய்,பக்கவாதம் ஆகியவற்றுக்கு நவீன சிகிச்சைகள் , அதற்கான நிபுணைர்கள் உள்ளனர். இவர்கள், சாதாரண நரம்பியல் சிகிச்சை தரும் டாக்டர்களை காட்டிலும்,சிறப்பு நிபுணத்துவத்துடன் பாதிப்புக்கான கரணங்களை ஆராய்ந்து,உரிய பரிசோதனை மற்றும் சரியான மருந்துகளை அளிக்கின்றனர்.வலிப்பு நோய்க்கு, இத்தகைய சிகிச்சைகள் சிறப்பு நிபுணர்கள் மூலம் கிடைக்கிறது.
வலிப்பு நோய் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது.
தற்போதுள்ள அதிநவீன பரிசோதனை முறைகள்,சிகிச்சை முறைகள் மூலமும், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்வதும் கூட இந்நோயை குணப்படுத்தலாம். இதுகுறித்த விழிப்புணர்வு, அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட வேண்டும் .
வலிப்பு நோய் என்றால், இ.இ.ஜி ஸ்கேன் செய்துவிட்டு,ஒரு மாத்திரை போட்டுக்கொள்வது அல்ல . மருத்துவத்தின் வளர்ச்சி, தொழில்நுட்பம் இந்த நோய்க்கான சரியான தீர்வுகளை அளிக்கிறது.இந்தியாவில்,சரியான முறையில் சிகிச்சை தரப்படாத நோய் எதுவென்றால்,அது வலிப்பு நோயகத் தான் இருக்கும்
இந்நோயை குணப்படுத்த, பயிற்சி பெற்ற நிபுணர்கள் குறைவாகவே உள்ளனர்.சிறப்பு சிகிச்சையும் குறைவாகவே உள்ளது.முப்பது ஆண்டுகளுக்கு முன்,மக்களிடையே இருதய அறுவை சிகிச்சை என்றாலே பயம் இருந்தது. நெஞ்சை பிளந்து,அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால்,ஏராளமானோர் சிகிச்சை செய்து கொள்ள முன்வரவில்லை.
ஆனால், இருதய அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதால், தற்போது இது சாதாரணமாகிவிட்டது.எவ்வளவு செலவாகும் என்று மட்டும் கேட்கின்றனர்.
முளை தொடர்பான வலிப்பு நோயை பொறுத்தவரை,இன்னும் மக்களிடையே தவறான எண்ணங்கள் உள்ளன. பரிசோதனைகள்,அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்த சிகிச்சை முறையில், ஏழு ஆண்டுகளுக்கு மேலாக , வீடியோ-இ.இ.ஜி .., முறையில் ,2000 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம் ;75 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
மேலும் விபரங்களுக்கு, Call: 94441 68480, 8220013330.