Medical Tourism

குழந்தையின்மை என்பது குடும்பப்  பிரிச்சனை என்பதைத்  தாண்டி சமூகப் பிரச்சனையாக மாறி வருகிறது. ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு.முதலில், தம்பதியரில் யாருக்குக்  குறைபாடு என்பதைத் கண்டறிய வேண்டும்..இதைக் கண்டறிய மருத்துவத்தில் நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

குறைகளைக் கண்டு பிடித்துவிட்டால் எளிதாகக் சரி செய்துவிடலாம் என்கிறார் பி.எஸ்.ஜி.., மருத்துவமனை கருவியல் துறை, கருவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹேமா ராஜேஷ் அவர் கூறியதாவது:

குழந்தையின்மை என்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஓராண்டுக்கு மேல் கருத்தரித்தல் பிரச்னை இருந்தால்  மட்டுமே மருத்துவரை அணுகவேண்டும்

காலதாமதமான திருமணம், வயது கடந்த நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடடுவது போன்ற காரணங்களால் கருத்தரித்தலில் பிரச்சனை எற்படலாம். உணவு உட்கொள்ளும் முறை முற்றிலும் மாறிவிட்டது. வேலைக்கு செல்லும் தம்பதியரிடம் பிரச்சனை இன்னும் அதிகம். தூக்க கடிகாரம் மாறினால், பாதிப்பு ஆதிக்கம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பிரச்சனை.

தூக்காமின்மையால் மாதவிடாய் பாதிப்பு ஏற்படுகிறது. மலட்டுத்தன்மை, ஆண், பெண் இருவருக்கும் சரிசமமாக உள்ளது.பெண்களை பொறுத்தவரை,முதல் பிரச்சனையாக இருப்பது முறையற்ற மாதவிடாய் இரண்டாவதாக,கர்ப்பப்பையில் ரத்தம்  கட்டுவது மூன்றாவதாக, கர்ப்பப்பை வீக்கம். இதையனைத்தையும் தாண்டி, தொற்றுநோய் தாக்குதல்களால், கருப்பைக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

கருக்கலைப்பினாலும் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுதவிர, கர்ப்பப்பையில் கட்டிகள்,சதை வளர்தல் ஆகியவற்றாலும் பிரச்சனைகள் ஏற்படும் கருத்தரித்தலில் பிரச்சனை இருத்தல் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்திக்கொண்டால் சரி செய்துவிடலாம்.இது சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்சனைதான்.

பி.எஸ்.ஜி.., மருத்துவமனையில் ஓவ்வொரு தம்பதிக்கு தனித்துவமான சிகிச்சை அளிக்கப்படுகிறது ஒரு சிலருக்கு சிகிச்சையின்றியே குழந்தைபேறு கிடைக்கலாம். பிறருக்கு சிகிச்சை பெற்றால் மட்டுமே குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கும். ஒவ்வொருவரின் பிரச்சனைக்கு ஏற்றபடி சிகிச்சை அளிக்கப்படும். பி.எஸ்.ஜி.., மருத்துவமனையில் நவீன லேப் மற்றும் ஸ்கேன் வசதிகள் உண்டு.

மேலும் விபரங்களுக்கு, மருத்துவர் ஹேமா ராஜேஷ்                          டி.ன், பி.,(ஓ.பி.ஜி.,),எப்.என்.பி.,(இனப்பெருக்க மருத்துவம்) கருவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிபுணர், கருவியல் துறை பி.எஸ்.ஜி.., மருத்துவமனை, பீளமேடு, கோவை-641 004.

Call: 8220013330