Medical Tourism

குழத்தைபேறு இல்லாமைக்கு ஒட்டு மொத்த சமுதாயம் குறை கூறுவது பெண்களை மட்டும் தான்.ஆனால், ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமாக பிரச்னை உள்ளது என்பது மருத்துவர்கள் தகவல்.

முறையற்ற உணவு ,மது , புகைபிடித்தல் உள்ளிட்ட பழக்கங்களால்,பெண்களை விட ஆண்களுக்கே பாதிப்பு அதிகம் என்கிறார்.பி.எஸ்.ஜி.., மருத்துவமனை கருவியல் துறை, கருவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிபுணர் மருத்துவர் ஹேமா ராஜேஷ் அவர் கூறியதாவது:.

ஆண்களுக்கு  ஏற்படும் பிரச்னைகள் தான் அதிகம். ஆண்களுக்கு விந்தணு பரிசோதனை  மட்டும் செய்து கொண்டிருந்த காலம் மாறி தற்போது அவர்களுக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மது ,புகைப்பழக்கம் உள்ள, 100 பேரில் 90 பேருக்கு பாதிப்பு அதிகம்.அடுத்தபடியாக மொபைல்போன்,வை-பை,லேப்டாப் ஆகியவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதால்,ஆண்களுக்கு பிரச்னை அதிகரிக்கிறது.இளம் வயது ஆண்களுக்கு,ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை அதிகரித்துள்ளன.குறிப்பாக சமீபத்திய பரிசோதனைகளில் அதிகளவு ஆண்களுக்கு தைராய்டு பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், ஆண்களின் விந்தணுக்களில் உயிர் இருப்பது இல்லை. இதற்கான பரிசோதனகளில் அதன் வேகம்,வடிவம் ஆகியவற்றை ஆராயும் போது, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுருப்பது கண்கூடாக தெரிகிறது.இது இப்பொது தான் பலருக்கும் தெரியவந்துள்ளது.

பெண்ணை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. இதை புரிய வைக்க மருத்துவர்களான நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.ஆண்களுக்கு மிக முக்கியமான ஹார்மோன் பிரச்னை அதிகம் உள்ளது.விந்தணு எண்ணிக்கை குறைவாக இருப்பது, அல்லது விந்தணுக்களே இல்லாமல் இருப்பது போன்ற பிரச்னைகளும் உள்ளன. விந்தணுக்கள் இல்லாமல் இருப்பது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது.

இவர்களுக்கு குழத்தையே  பிறக்காது என, முடிவு செய்ய முடியாது. பிரச்னையை பரிசோதனைகள் மூலம் கண்டறித்து தீர்வு வழங்கப்படுகிறது.ஒன்று அல்லது  இரண்டு விந்தணுக்கள் கிடைத்தாலும் போதும் அவர்களுக்கு குழத்தைபேறு சாத்தியமே.இதற்கு ‘டெஸ்ட்டிகுலர் பயாப்ஸி’ மூலம் தீர்வு காணமுடியும்.ஒரு சில ஆண்களுக்கு பிறவிக்             குறைபாடுகளும் உள்ளது.

இதற்கு ‘கிலைன் பெல்டர் சிண்ட்ரோம்’  என அழைக்கப்படுகிறது.இதுபோன்ற பிரச்னைகளையும் தீர்க்க ஆராய்ச்சிகள் நடத்து வருகின்றன .

மேலும் விபரங்களுக்கு, மருத்துவர் ஹேமா ராஜேஷ்                          டி.ன், பி.,(ஓ.பி.ஜி.,),எப்.என்.பி.,(இனப்பெருக்க மருத்துவம்) கருவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவ நிபுணர், கருவியல் துறை பி.எஸ்.ஜி.., மருத்துவமனை, பீளமேடு, கோவை-641 004.

Call: 8220013330