Medical Tourism

குழந்தைக்காக திட்டமிடும் போதே அதற்கான அனைத்து தகுதிகள் குறித்து பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் பெற, 30 வயதுக்கு முன் குழந்தை பெற்றுக் கொள்வது சிறப்பு. இன்றைய சூழலில் பள்ளிச்சிறுவர்களே உடல்பருமனுடன் உள்ளனர். சிறு வயது முதல் உள்ள வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுப்பழக்கங்களால், உண்டாகும் உடல் பருமன் இளம்பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை மற்றும் கருத்தருப்பில் தாமதம் ஏற்படுகிறது.

ஆரோக்கியமான குழந்தை பெற பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கான திட்டமிடுதல் கருவுறும் முன்னரே துவங்குதல் வேண்டும். உடல்பருமன் கூடுதலாக இருப்பவர்களுக்கு கர்ப்பகால நோய்கள் மற்றும் பேறு கால சிக்கல்கள் கூடுதலாக இருப்பதால், எடைக்குறைப்புக்கு பின் குழந்தை பெற திட்டமிடலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வலிப்பு நோய் மற்றும் இதற நோய்களுக்காக சிகிச்சையில் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவரை கண்டு சர்க்கரை அளவு சரிசெய்வது, குழந்தையை பாதிக்காத மருந்துகள், உண்டு எனில் மாற்றுவது, ஆகியவற்றை செய்வதனால், கருவிலுள்ள குழந்தைக்கு ஏற்படும் குறைபாடுகளை ஓரளவு தவிர்க்க முடியும்.

கருவுற்றிருக்கும் பெண்கள் முறையே மகப்பேறு மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைப்படி, பரிசோதனைகள் செய்ய வேண்டும். மூன்று மற்றும் ஐந்தாம் மாதங்களில், ஸ்கேன் பரிசோதனை அவசியம். மூன்றாம் மாதத்தில், செய்யப்படும் என்.டி., ஸ்கேன் மூலம் குழந்தையின் கழுத்தின் பின்பகுதியில் உள்ள நீர் அளவு அளக்கப்படும். இத்துடன் தாயின் வயது மற்றும் சில ரத்தப்பரிசோதனை முடிவுகள் சேர்த்து டவுன்சின்டரோம் பாதிப்பிற்கான வாய்ப்பை அறியலாம். வாய்ப்பு அதிகம் எனில், பனிக்குட நீர் மற்றும் நஞ்சுப்பரிசோதனை தேவைப்படும். தற்போது தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், கருவுற்ற தாயின் ரத்தத்திலுள்ள குழந்தையின் டி.என்.ஏ., வை பரிசோதித்தும் பல்வேறு நோய்களை கண்டறிய முடியும்.

ஐந்தாம் மாதம் முறையே குழந்தையின் முழு பரிசோதனை செய்யும் அனாமலி ஸ்கேன் செய்ய வேண்டும். கர்ப்ப காலத்தில் உடை எடையளவு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை, உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, குறித்த நேரத்தில் சத்தான் உணவு உட்கொள்தல், தண்ணீர் குடித்தல், முறையான துாக்கம், உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. கருவுறும் முன், செய்யும் பல உடற்பயிற்சிகளை சில மாற்றங்களுடன் கர்ப்பகாலத்திலும், செய்யலாம். இவ்வாறு, உடற்பயிற்சி செய்வதால், பிரசவத்தில் சிக்கல்கள் குறைக்கவும், மற்றும் பிரசவத்தின் பின் எடைக்குறைப்புக்கு ஏதுவாகவும் இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு,டாக்டர் லலிதா நடராஜன், எம்.டி., எம்.ஆர்.சி.ஓ.ஜி.,(யூ.கே.,) எப்.எப்.எம்.,(சிங்கப்பூர்).கரு மருத்துவ நிபுணர், கரு பாதுகாப்பு மையம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை,பீளமேடு, கோவை – 641004. call-94441 68480, 8220013330